வசந்த வாழ்க்கை
சல சல வென கதை பேசியவாறு
வழி மாறாது ஓடும்
நீரோட்டம் அருகில்..
வேகமாக அருந்திவிட முடியாத
சூடு உடன்...
ஒரு கோப்பை தேநீரும்....
கையில் நூல் பல
ஒவ்வொன்றாக ஏந்தி...
பக்கங்கள் பல திருப்பி...
வாசிப்புடன் ...
தன்னை இரசிக்க கெஞ்சும்
இயற்கையின் மடியில் தலை வைத்து....
தென்றலோடு மனமாட....
மனம் கவர்ந்தவனுடன்
நான் உரையாட...
தென்றலினால் உடை நடனமாட...
உடையோடு என் உள்ளம் ஊஞ்சலாட...
உள்ளத்தோடு இசைத்தபடி என்னவனுடன் விழியாட.....
ஒரு வசந்த வாழ்க்கை !!