சின்ன சின்ன பொய்கள் கூறி .. என் சினம் அதனை கடனாக பெற்று... நொடிகளில் கள்ளச் சிரிப்புதனைக் கொண்டு அக்கடனடைத்து... மனம் கவர்ந்து கடத்திச் செல்லும் கள்வனடா நீ ... !! இப்படிக்கு, கள்வனின் காதலி :)
திருட்டு தின்பண்டங்களும்..! கைமாறும் டிஃபன் டப்பாக்களும்...! பெஞ்சுகளுக்கு கீழ் இருக்கும் " பலகைக்கும் - ரெக்கார்ட் அசைமன்ட்டு" களுக்கான பந்தமும்...! ஜன்னலோர இருக்கையும் அதனாலே அவ்வப்போது உலா போகும் நம் விழிகளும்....! விழி கண்டதை உடன் அமர்ந்திருக்கும் உள்ளத்திடம் மறைக்கும் உதடுகளும்...! அதை உணர்ந்து நக்கலாக "எதுக்கு !🙄 😅" என்றுரைக்கும் நட்பும்...! தேர்வு என்றால் ஆசிரியராக மாறும் அந்த தோழமையும்.. ! நம் வகுப்பு தொடங்கி அனைத்து வகுப்புகளின் சூடு குறையா செய்திகளும்.. கதைப்பதற்கு பஞ்சமில்லாது கன்டன்டுகளும்... பத்தாத காலமும்.. !! உடனிருக்கும் நட்பை உடன் பயிலும் மகானுடன் மனமார கேளிக்கைக்கு உள்ளாக்குவதும்...! பல நேரங்களில் ஆசிரியர்களின் கேள்விகளும்... பதில் அறியாது ஒன்று போல பின் இருக்கையே நிற்பதும்...! குறையாத சல சலப்புகளும்..! குன்றாத குதுகலமும்..! எதைதான் விடுவது.... கல்லூரியின் இறுதி இருக்கைகள் என்றாலே அலாதி பிரியம் தான்.... என்றும் எவருக்கும்..!!!
சல சல வென கதை பேசியவாறு வழி மாறாது ஓடும் நீரோட்டம் அருகில்.. வேகமாக அருந்திவிட முடியாத சூடு உடன்... ஒரு கோப்பை தேநீரும்.... கையில் நூல் பல ஒவ்வொன்றாக ஏந்தி... பக்கங்கள் பல திருப்பி... வாசிப்புடன் ... தன்னை இரசிக்க கெஞ்சும் இயற்கையின் மடியில் தலை வைத்து.... தென்றலோடு மனமாட.... மனம் கவர்ந்தவனுடன் நான் உரையாட... தென்றலினால் உடை நடனமாட... உடையோடு என் உள்ளம் ஊஞ்சலாட... உள்ளத்தோடு இசைத்தபடி என்னவனுடன் விழியாட..... ஒரு வசந்த வாழ்க்கை !!