Posts

வாழும்!

கசிந்து போன காதல் கசந்து போகும்... கடந்தும் போகும்.. ! தித்தித்து திகட்டியிருந்த காதல்... மரத்து போகும்... மறந்தும் போகும்! கசந்து.. கடந்து.. மரத்து.. மறந்து.. போன அது மற்றொரு அந்தாதியாய்... வேறு கோணம் கண்டு.. வழுயிழந்து ஒளிந்து உயிரில் கலந்து வாழும்!!

தவம் !

  உன் சட்டைப் பையுனுள் ஒளிந்துகொள்ளும் உயரத்தை வரமாக கேட்பேன்... நிமிடத்திற்கு நிமிடம்  முழு கையளவுச் சட்டையை நீ சுருட்டிக் கொள்கையில் உள்ளிருந்து எட்டிப்பார்த்து... ரசித்தபடி  உன் நெஞ்சருகில்  சுருண்டு ஒட்டிக் கொள்வதற்காக.. !!

கல்லூரியின் கலை

விடுமுறையில் வெறுமை கண்ட பெஞ்சுகளுக்கு எல்லாம் இனி கொண்டாட்டம்... ! கலர் கலரா சல்வார்களும்... ! அரட்டையும் கிசுகிசுக்களும்....! கைப்பந்துகளும்  கிரிக்கட் மட்டைகளும் இசையமைக்க ... கிட்டார்களும் வயலின்களும் நடனம் ஆடுகின்றன..!! இப்படிக்கு, கல்லூரியின் செங்கல்கள்! 

பொறாமை தான்!

 உன் சட்டைப்  பித்தான்களுக்கு  எல்லாம்  அகம்பாவம் ..... ! அடங்க மறுத்து  ஆர்ப்பாட்டம்...! நாள்தோறும்  உன்னுடன் உலா வருகின்றனவே  அதனால்..!!!

கள்வனின் காதலி

சின்ன‌ சின்ன பொய்கள் கூறி .. என் சினம் அதனை கடனாக பெற்று... நொடிகளில் கள்ளச் சிரிப்புதனைக் கொண்டு அக்கடனடைத்து... மனம் கவர்ந்து கடத்திச் செல்லும் கள்வனடா நீ ... !! இப்படிக்கு, கள்வனின் காதலி :)

இறுதி இருக்கைகளும் அலாதி பிரியமும்.. !

  திருட்டு தின்பண்டங்களும்..! கைமாறும் டிஃபன் டப்பாக்களும்...! பெஞ்சுகளுக்கு கீழ் இருக்கும் " பலகைக்கும் - ரெக்கார்ட் அசைமன்ட்டு" களுக்கான பந்தமும்...! ஜன்னலோர இருக்கையும் அதனாலே அவ்வப்போது உலா போகும் நம் விழிகளும்....! விழி கண்டதை உடன் அமர்ந்திருக்கும் உள்ளத்திடம் மறைக்கும் உதடுகளும்...! அதை உணர்ந்து நக்கலாக "எதுக்கு !🙄 😅" என்றுரைக்கும் நட்பும்...! தேர்வு என்றால் ஆசிரியராக மாறும் அந்த தோழமையும்.. ! நம் வகுப்பு தொடங்கி அனைத்து வகுப்புகளின் சூடு குறையா செய்திகளும்.. கதைப்பதற்கு பஞ்சமில்லாது கன்டன்டுகளும்... பத்தாத காலமும்.. !! உடனிருக்கும் நட்பை உடன் பயிலும் மகானுடன் மனமார கேளிக்கைக்கு உள்ளாக்குவதும்...! பல நேரங்களில் ஆசிரியர்களின் கேள்விகளும்... பதில் அறியாது ஒன்று போல பின் இருக்கையே நிற்பதும்...! குறையாத சல சலப்புகளும்..! குன்றாத குதுகலமும்..‌! எதைதான் விடுவது.... கல்லூரியின் இறுதி இருக்கைகள் என்றாலே அலாதி பிரியம் தான்.... என்றும் எவருக்கும்..!!!

வசந்த வாழ்க்கை

 சல சல வென கதை பேசியவாறு வழி மாறாது ஓடும்  நீரோட்டம் அருகில்.. வேகமாக அருந்திவிட முடியாத சூடு உடன்... ஒரு கோப்பை தேநீரும்.... கையில் நூல் பல  ஒவ்வொன்றாக ஏந்தி... பக்கங்கள் பல திருப்பி... வாசிப்புடன் ... தன்னை இரசிக்க கெஞ்சும்  இயற்கையின் மடியில் தலை வைத்து.... தென்றலோடு மனமாட.... மனம் கவர்ந்தவனுடன்  நான் உரையாட... தென்றலினால் உடை நடனமாட... உடையோடு என் உள்ளம் ஊஞ்சலாட... உள்ளத்தோடு இசைத்தபடி என்னவனுடன் விழியாட..... ஒரு வசந்த வாழ்க்கை  !!